பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 15 லா. ச. ராமாமிருதம் * எங்கள் பெயர்களைக் கூவ ஆரம்பித்ததுமே, எழுந்து போய் எதிரில் நின்றோம். “ட்ரிபிள்ஸ் போனிங்களா?” 'போனோம்.” "ரூபா வெச்சிருக்கீங்களா?” தலையை ஆட் டினோம். மெய்யாவே, வாயை அடைந்துவிட்டது. ஆனால் தேம்பல் சப்தம், யாரு? "ஹல்ம். இனிமேல் செய்யாதிங்க ஆல்ரைட் வெளி யிலே ரைட்டர்கிட்டே சீட்டு வாங்கிட்டு ஸ்டேஷனுக்குப் போய் சைக்கிளை விடுதலை வாங்கிக்கங்க." கனவா? நனவா ? ? கிமிண்டிப் பார்க்கக்கொள்ளக் {}- R கூட வழியில்லை. "இறங்குங்க. நெக்ஸ்ட்!" வெளியில் 249 காத்துக் கொண்டிருந்தான். "பரவாயில்லை, அதிர்ஷ்டசாலிங்கதான். குண்டு மிளகா உங்களை எப்படி சும்மா விட்டாரு இதையே தனியா ஒரு சிங்கிள் டீ மேலே யோசிக்க வேண்டிய சம்ாச்சாரம்.' அவன் கேட்பது எங்களுக்குத் தெரியவில்லையா ? ஆனால் ஒட்டாண்டியா நிக்கறோமே! "பரவாயில்லே தம்பிங்களா, குன்னிப் போயிடாதிங்க, சின்னப் பையன்க, படிக்கிற பசங்கன்னு அன்னிக்கு சும்மாவே விட்டிருப்பேன். ஆனால் உங்களில் எவன்? "டாட்டா காட்டினதும் ரோஷம் பொங்கிச்சு, டிபார்ட் மெண்டா, கிள்ளுக்கீரையா?” £g - - y - it: . - ஸார், ஸார்-" ஒற்றை விரலை வினயமாக நீட்டிக் கொண்டு, இது நான்.