பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 & சிந்தாநதி “என்ன தம்பி” எண்ணாலேயே அவனை அழைத்து, 'nாரை எங்கு கண்டான். "நீங்கள் இவ்வளவு நல்லவர்னு எங்களுக்குத் தெரி யாது. இனிமேல் இப்படிச் செய்யமாட்டோம். சத்யமா!"முதுகைத் தட்டிக் கொடுத்தான். "பரவாயில்லே தம்பி! எல்லாமே நடக்கறதுதான். இல் லாட்டி, டிபார்ட் மெண்ட் பிழைக்கறதெப்படி?” “ஸார், நாங்கள் ஸ்டேஷனுக்குப் போய் வண்டியை மீட்டுண்டு, பள்ளிக்கூடம் போய்ச் சேர்றதுக்குள்ளே ரொம்ப லேட் ஆயிடும்.” "சாயங்காலம் மீட்டுக்கங்க. அவசரமில்லே.” "இல்லை, இப்பவே மீட்டுண்டுதான் போவணும். எங்க ளுக்கு வேறு வழியில்லே. ஸார், ஒரு ரிக்வெஸ்ட், அவன் கண்களில் வினாக்குறி மேலும் கீழுமாகக் குதித்தது. “ட்ரிபிள்ஸ்-க்கு." அந்த ஒரு செக்கெண்டு திகைப்பில் என் அர்த்தம் தோய்ந்ததும், ஆளைப் பிடுங்கிண்டு ஒரு சிரிப்பு வந்தது பாருங்கோ- நாங்கள் பிய்த்துக் கொண்டோம். சிரிப்பே சம்மதம் தவிர, எங்கள் ஹெட்மிஸ்ட்ரெஸ் ஒரு முழி முழிச்சாள்னா, அந்தக் கிலிக்கு நாங்கள் 249 என்ன 249, 378, 875 எல்லாமே சமாளிக்கத் தயார், 'அட்வெஞ்சர் எப்படி? அப்பா, ஒண்ணு. இதில் அப்பாக்களுக்கு ஒரு நீதியிருக்கிறது. பிள்ளைகளிடம் எப்பவும் இருக்கிறபடியா பத்து ரூபாய்க்கேனும் குறையாமல் கொடுக்க வெக்கணும். என்ன சொல்றேள்?" நான் சொல்ல என்ன இருக்கிறது? இது இளைஞர் ஆண்டு.