பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் & 121 அறை உள்ளிருந்து பெரியவர் வெளிப்பட்டார்என்னென்னவோ வாயில் வந்தபடி பிதற்றிக்கொண்டு. அம்மா! அந்த மாதிரிக் கோபத்தை நான் பார்த்ததில்லை உடம்பெல்லாம் ஆடுகிறது. வேட்டி அவிழ்ந்து போனது தெரியவில்லை. அவரைப் பிடிக்க முயன்று, முடியாமல் பாட்டி அவர் தோளில் தொங்குகிறாள். வாயில் துரை தள்ளுகிறது. என்ன ஆச்சு? என்ன நடந்தது? எங்களுக்குள்ளேயே கிசுகிசுவில், படிப்படியாக என் குழந்தை அறிவுக்குப் புரிந்தவரை, நேற்று எண்ணி, அலமாரியில் பூட்டி வைத்த பணத்தில், பத்து ரூபாயைக் கானோமாம். "பூ! யாரேனும் உதட்டைப் பிதுக்கறேளா? அப்போ, பவுன் பதின்மூன்று ரூபாய்க்கு வித்தது. இப்போ விலை ரூ. 2000 அந்நாளைய பத்து ரூபாய் பாய்ந்த வேகத்தையும், வீச்சையும் இதைவிட ருசுப்படுத்த எனக்குத் தேவை யில்லை. மேலே போகிறேன். பெரியவர் புயல் வீசுகிறார். சாமான்கள் உருள் கின்றன. மகன்கள் மேல் தனித் தனியாகப் பாய்கின்றார். "இருங்க நைனா! பொறுங்க நைனா சாந்தமாவுங்க நைனா !” மூத்தவன் கெஞ்சுகிறான். “தயவு செய்து கேட்டுக்கங்க! நீங்க எண்ணி வெக்கறதுலே கணக்குப் பிரண்டு போயிருக்கலாமா? இல்லே, உங்கள் குறிப் பேடுலே கூட்டல் கழித்தல்லே-” "என்னடா பேமானி, எனக்குக் கணக்கு சொல்லித் தரவா வரே!” நோட்டைத் துரக்கி அவன் முகத்தில் சுழற்றி அடித்தார். “ஒரு பத்து ரூபா நோட்டுடா!