பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 & சிந்தாநதி நேத்திக்கு ரூவா சில்லரையோடு பிஸ்கட் டப்பியிலே வெச்சிருக்கேன், இன்னிக் காலையிலே காணம்னா, எனக்குப் பாடம் படிக்க வரானே! அந்த நோட்டிலே, ராஜா தலையிலே மச்சம் மாதிரி ஏதோ துரு இருந்தது. சுரண்டிப் பார்த்தேன் வரல்லே. சரி, நாளைக்குப் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். என்னடா, எனக்குக் காதா குத்தறே? கடுக்கன் தொங்குது பார்த்தியா?” இன்னும் என்னென்னவோ புதுசு புதுசா அர்த்தம் புரியாத வார்த்தைகள். இப்போ புரிகிறது. ஆனால் சொல்வதற்கில்லை. விசாரணை, வீட்டுப் பெண்டிரையும், பிள்ளைகளை யும், கூட்டாயும், தனித் தனியாகவும், உள்ளே கூப்பிட் டும் பட்டறையிலுமாக நடக்கிறது. நேத்திக்கு மறதியா அலமாரிக் கதவுலேயே சாவி நின்னுபோச்சு. இருந்தால் என்ன? இது குடும்பமா, குடித்தனமா? இதென்னடா வீடு : எத்தினி நாளா, இந்த சமயத்துக்கு எவன்டா காத்திருந்தான் ? என்னால் ஜெரிக்கவே முடியல்லியே!” இருப்புக் கொள்ளாமல் அங்குமிங்குமாக அலை கிறார்; திகைத்து நிற்கிறார். கண்களில் காங்கை அடிக்கிறது. மனிதன் மாறிவிட்டான். பெருமாளுக்குப் பூஜை நடக்கவில்லை சாமி வாயில் மண். ஏன், வீட்டில் எல்லார் வாயிலுமே அதுதான். அடுப்பு ஒழுங்காகப் புதைந்ததோ? அன்றைய வயிறு அலும் பலுக்குப் பணம் கேட்க் யாருக்குத் தைரியம் இருக்கு? மத யானை, நெருங்கவே பயமாயிருக்கே குளிக்கக் கூட இல்லை.