பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 வானவில் இன்னும் அறியோமாம் ஆதியும், மூலமும், உயிர் பிறந்த்து எப்படி? ஆனால் அதன் ஓயாத இயக்கத்தில் ஆதி மூலமே அதன் நிதரிசனமாக உதிர்ந்த சிதர்கள். உரு, பூதங்கள், பேதங்கள். உருப்பேதங்களின் உறமுறைகள் ஆக்கம், அழிவு, காலம். உறமுறையின் ஒரு முறை தலைமுறையென உயிர் சக்தியின் ஏதோ வியாபகத்தின் எண்ணற்ற உருக்களில், ஒவ்வொரு உருவும் அது படும் கடையலில், அதன் சடு பாடும், மாறுபாடும், பாகுபாடும், இடம், ஏவல், காலம் கொண்டு தனிக்கதி, தனித்தனிக் கதி ஆன பின், இத்தனைக்கும் முன்னணி, பின்னணி இயக்க சக்தியின் நித்தியத்தை அதன் பெயர் சத்தியம் என்று அழைத்து, உருவின் தலைமுறை சிந்திக்க மனமெனும் கருவி உயிரின் இத்தனை பெரிய வியாபாகத்தைத் தன்னுள் அடக்கும் அதன் வல்லமைதான் என்ன ! மனமெனும் தேன் கூடு தேன் கூட்டின் எண்ணற்ற வளைகள் வளைகளின் கணிக்க ஒணா ஆழங்கள் இருள்கள் மனமெனும் அரங்கம், அப்பவே