பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 129 கொண்டபின், கடைசியில் கண்ட தெளிவு: இந்த இயக்கத்துக்கு அர்த்தமேயில்லை. ஆகவே கேள்வியின் பயனில்லை, கேள்விக்குப் பதிலும் இல்லை என ஏற்பதன் இந்த வியர்த்தத்தைக் காட்டிலும் பெரும் துக்கம் உண்டெனில் எனக்குக் காட்டு. உடனேயே சொல்கிறேன். ஆனால்_ ஆ! இது பாஷை தந்த அற்புதச் சொல். அதுவே மறுப்பு, அதுவே பதில், அதுவே அமைதி, அதுவே நம்பிக்கை. நாளையெனும் வானவில்லைச் சுட்டிக் காட்டும் ஒளிக்கதிர். "ஆனால்” என்பதே தனி மந்திரம். மாத்திரை. மாத்திரை நேரத்துக்குத் தனி உலகம். வாசுதேவன் சிறைப் பூட்டைக் கழற்றிய சக்தி. அவர் தன் தலை மேல் கூடையுடன் கோகுலம் செல்ல யமுனா நதி நடுவே பிரிந்த பாதை. இல்லை, உண்டு எனும் இரு சமுத்திரங்களையும் பிரிக்கும் வரப்பு. ஆகவே, ஆனால் உயிருக்கே அர்த்தமில்லாததால், தேடலில் அர்த்தமில்லை என்று பதில் கிடைத்தால். கடி ஒன்றும் மூழ்கிப் போய்விடவில்லை. இதுவ தெளிவுதான்; பொருள் இல்லை எனத் ே இல்லாத பொருளைத் தேடாமல் இருக்கப் போ அதற்கு இன்றுவரை நீடித்து வரும் இவ்வுலகமே இன்று என்ன, இனிமேலும் எக்காலமும். சிறகுடன் பிறந்துவிட்டு, அதை அடிக்காம உயரப் பறக்காமலோ, ககனத்தில் நீந்தாமலோ இரு. (ԼՔւգ-Այո:5l. உயர உயர இன்னும் உயர. சி ந - 9