பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 & சிந்தாநதி கிறான். புணர்ச்சியின் கடைசிக் கட்டத்தில், ஒடத்தில் அடித்தட்டு திடீரென கழன்று அவள் அப்படியே தண்ணிரில் மூழ்கிப் போய்விடுகிறாள். கனவு கலைந்துவிடுகிறது. மூன்று மாதங்கள் கழித்து, வழக்கமாக வரும் கடிதப் போக்கில் இரண்டு வரி: அவள் மூன்று மாதமாக ஸ்நானம் பண்ணவில்லை. இவன் நினைத்துக் கொள்கிறான். அவள் கண்டிருக் கும் கரு, அவன் கனவில் நட்ட வித்தென. அதில் ஏதோ ஒரு மன நிறைவு. ஆனால், முறைப்படி, முதல் பிரசவத் துக்குப் பிறந்த வீட்டுக்கு வந்திருந்த இடத்தில், ஒரு நாள் கிணற்றடியில் சறுக்கி விழுந்து, இசைகேடாக மண்டையில் அடிபட்டு இறந்துவிடுகிறாள். குழந்தையும் அவளுடன். எந்தக் கதைச் சுருக்கமும் அதிருப்தியைத்தான் கொடுக்கும். முழு உருவில் ஒரளவேனும் நுகரக்கூடிய பொருள் நயம், சொல் நயம், நடை நயம், வரிகளிடையே கேட்கும் மோன சப்தங்கள். சப்தங்களின் அதிர்வுகள் உணரக்கூடிய சிருஷ்டி வேதனை, எழுதத் துண்டிய மனித அனுபாதபம்- இவையெல்லாம் கதைச் சுருக்கத் தில் தப்பி விடும் அவலக்ஷணமான பாவச் செயல், உயிருடன் இந்தக் கோழி உரிப்பு, எனக்கு என் மேலேயே பொங்குகிறது. ஆனால் வேறு வழி? விசாரித்துக் கொண்டு இடம் சேர்ந்ததும் நவராத்ரி கொலுவில் வைத்திருப்பது போன்று, சின்னத் தோட்டத்தின் நடுவே (நாலைந்து வாழை மரங்கள், தென்னை, சில பூச்செடிகள் அடக்கமாக ஒளிந் திருக்கும் சிறிய வீடு. மண் சுவர், ஒலைக்கூரை, வெளியே பார்க்கவே படுசுத்தம். உள்ளே கைத்தறிச் சத்தம் கேட்கிறது.