பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் & 135 நான் உள்ளே நுழைந்ததுமே, என்னைப் பார்த்ததுமே நான் என்னை அறிவிக்காமலே ஆள் என்னைத் தெரிந்து கொண்டுவிட்டான். அதற்காகத் தறியிலிருந்து அவன் இறங்கவில்லை. அந்தத் தொழிலில் நேரம் எவ்வளவு விலை உயர்ந்தது என்று எனக்குத் தெரியும். முகத்தில் என்ன மலர்ச்சி ! - "ஐயா! வாங்க, வாங்க. ரொம்ப நாளா எதிர்பார்த் திட்டிருக்கேன். அதுவும் சென்ற ஒரு வாரமா உங்க நினைப்பு அப்படி அழுத்தது. நீங்க வேணுமானா அவளைக் கேளுங்க- கமலி: யாரு வந்திருக்காக பாரு!” நடு முற்றம் தாண்டி, சமையலறையிலிருந்து அவள் வெளிப்பட்டாள், இடுப்பில் குழந்தையுடன். எப்படி, தாழல் போன்ற இந்த செக்கக் செவேல் மேனி? நேரே என்னிடம் வந்து, இதற்காகவே இந்நாள் காத் திருந்தாற்போல், குழந்தையை என்னிடம் கொடுத்தாள். அதுவும் வேற்று முகம் பாராமல் வந்தது. என் மோவாயின் தாடி முள்ளைத் தடவிச் சிரித்தது. ஸ்வர்ண விக்ரஹம். வயதுக்கு என் தாய்க்குத் தோற்கமாட்டேன் என்கிற மாதிரி, உடனேயே அது என் மடியை நனைத்த தும், மூவரும் ஒருங்கே சிரித்துவிட்டோம். அவள்வரை புன்னகைதான். அவனுக்குப் பரம சந்தோஷம். "இது பிறந்ததில், உங்கள் எழுத்தின் பங்கை நான் இனிச் சொல்லத் தேவையில்லை. இதான் முத்திரை வெச்சுட் டதே! என்ன சொல்றே, கமலி?” அவள் ஒன்றுமே சொல்லவில்லை. குழந்தையை எடுத்துக்கொண்டு போனாள். "குழந்தைக்கு என்ன பெயர் தெரியுங்களா? ஜனனி!” 'ஐயாவுக்கு ஒண்ணும் அவசரமில்லேங்களே ! இரண்டு நாள் தங்கிப் போவலாமில்லே? உங்களுக்கு எந்த சந்தேகமும் வேணாம். ஏழு தலைமுறையாக