பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 & சிந்தாநதி எங்கள் குடும்பம் சைவம். எங்கள் ஜாதியில் சாப்பிட றவங்க இருக்காங்க” கண்ணைச் சிமிட்டினான். "அதுவேறே சமாச்சாரம், இவள் பிராமணப் பெண். இவள் தாயார் எங்களோடு தான் இருக்காங்க சமையல் அவங்கதான். நான் உங்க பிள்ளை மாதிரி. எனக்கு வேறே சொல்லத் தெரியலே." அவன் கண்கள் பனித்தனவோ? மிக்க அன்புடன் என் பற்றி, சுற்றம் பற்றி, பொறுமை யாக, விவரமாக விசாரித்தான். முதன் முதலாக என் எழுத்து அவன் கண்ணுக்குத் தற்செயலாகப் பட்டு, படிக்க நேர்ந்ததிலிருந்து இதுவரை அவனுக்கு அதிலிருந்த ஈடுபாடு, புத்தகங்கள் கிடைக்காமல், தேடியும் திருடியும் கூடப் படிக்கப்பட்ட சிரமங்களைத் தெரிவித்துக் கொண்டான். வரிசையாக ஒப்பித்தான். ஒரு குட்டிப் பிரவசனமே நடந்தது. பிறகு அவன் பரம்பரைத் தொழிலைப் பற்றி, அதன் நுணுக்கங்கள், அது வாங்கும் உழைப்பு. வாய் பேசிக்கொண்டே, அதன் கைகளும், கால்களும் தம் தம் வேலையைச் செய்துகொண்டிருந்தன. இழை அறுத்த சமயத்தில் கவனம் பிசகாமல், விரல்கள் முடிச்சுப் போட்டன. இடையே அவள் பொத்த இளநீர் ஒன்று கொணர்ந்து கொடுத்தாள். சற்று நேரத்துக்குப் பின் காப்பி. நான் அடையாளம் கண்டுகொள்கிற மாதிரிதான். காலையில் எண்ணெய் ஸ்நானமோ? அவள் திரும்பு கையில், அடர்ந்து, பிசுபிசுவென உலர்ந்து, துணி முடிச் சிட்ட கூந்தலில் பேரலைகள் பாய்ந்தன. தோணி ஏறி இறங்கலாம்.