பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 137 பேச்சில் நேரம் போனதே தெரியவில்லை. விளக்கு வைக்கும் சமயத்துக்கு, தறியை வணங்கிவிட்டு, அந்தப் பள்ளத்திலிருந்து சுறுசுறுப்புடன் ஏறி மேடையினின்று. குதித்து என் கைகளைப் பற்றி- தடுக்க நேரமில்லை. தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். வலது காலுக்குமுட்டுக் கொடுக்க பூட். "இளம்பிள்ளை வாதம் என்னை முழுசாகக் கண்டுட் டிங்க. என் கதையை நான் தனியாகச் சொல்லத் தேவை யில்லை.” சிரித்தான். சோகமும் வெற்றியும் கலந்த சிரிப்பு. சாப்பிட இன்னும் நேரம் இருந்தது. கோவிலுக்குப் போய் வருகிறேன் என்று நான் சொன்ன்து ஒரு சாக்கு. என் எண்ணங்களுடன் நான் தனியாக இருக்க விரும்பு கிறேன் என்று புரிந்துகொள்ள அவனுக்குத் தெரியாதா என்ன ! பாடல் பெற்ற ஸ்தலம். புராதனமான கோவில், சில துரண்களில், சிற்பங்கள் முகம் தேய்ந்து போயிருந் தன. கோவில்களில் கூடத்தான், புகாத இடமில்லாத மின்சாரமும், டேப்ரிகார்டரும் ஏனோ இந்தக் கோவிலை மறந்துவிட்டன. எங்கும் அகல் விளக்குகளின் ஒளியும், நிழலாட்டமும் இழைந்த இருளில் நியாயமாக ஸ்ன்னி தானத்துக்கு உரிய ஒரு மர்மஸ்தாயி (mystery) திகழ்ந்தது. அந்த மங்கவில், சிற்பங்களை வியந்துகொண்டே வந்தவன் த்வஜஸ்தம்படியில் திடீரென நின்று விளக்குப் பாவையில் மனம் நழுவி, அதை வெடுக்கென இழந்தும் போனேன். என்ன வேலைப்பாடு, என்ன அழகு! இவளுக்கும் கோவிலில் வயதாகியிருக்குமோ! இவளை வெறுமனே விளக்கேந்தும் பணிப் பெண் ணாக என்னால் எண்ண முடியவில்லை. அவன் மேல்