பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 & சிந்தாநதி காதலாகி, ஆனால் அவன் கிடைக்கமாட்டாதவன் என உணர்ந்துகொண்டு அவனுக்கு ஏந்தும் சுடர்த் தழலுக்குத் தன்னை ஆகுதியாக- அகலை இரு கைகளிலும் இவள் ஏந்திய விதம் அதாவது, தன் அங்கங்கள், உடல், கால் கட்டை விரலினின்று மண்டை உச்சிவரை ஆவித் துடிப்பை ஒருங்கே, மனோவன்மையில், கைகளுக்குக் கொணர்ந்து, அகல் சுடரில் இறக்கி- - அந்தச் சமயத்தில் அந்த முக்கால் இருளிலிருந்து பாவை விளக்கின் வெளிச்சத்துக்கு, உருவக் கோடுகள் ஸ்திரமாகி அவள் வெளிப்பட்டாள். இப்போ அவளோடு குழந்தை இல்லை. நாங்கள் ஒருவரை யொருவர் எதிர் பாராத, கண நேர திக்பிரமையில் திகைத்து, எதிர் எதிர் நின்றோம். - இப்பவும் அந்த முகத்தில் ஏதும் காண முடியவில்லை. முகமனோ, சிரிப்போ, சிடுப்போ, அல்ல. எந்த உணர்ச்சி யின் மறைப்போ- அது மந்த முகமில்லை. என்னைக் கடந்து சென்றாள். கடந்த அந்தத் துடி நேரப் பொழுதில், அந்த ஆழ் கடல் விழிகளினின்று ஒரு கொழுந்து புறப்பட்டு, என்னை மின்னுருவித் தன்னில் குளிப்பாட்டி மறைந்தது. அவ்விதம் அவள் பார்வையில் தெரிந்தது நன்றியா? அல்ல, வேறெதாயிருந்தால், அது எது? நான் குளித்தது வெம்மையிலா? தண்மையிலா? நாணயத்தின் மறுபக்கம் போல், அந்தப் பார்வையில் நான் படித்தது, நான் எழுதிய கதைக்கு மறு பக்கமா? கேள்வி என் மேல் நூற்கும் பட்டு நூல் கூட்டுக்குள், பதிலைத் தேடிக் கொண்டிருக்கிறேன். சிந்தா நதிப் படுக்கையில் ஒரு சிப்பி முத்து. 玲 哆 * ;令ు 争 ه به