பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 13 இந்த வாக்கியம் எப்படி என் வாயிலிருந்து வந்தது, இந்த ரூபத்தில் ஏன் வரணும்? இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இன்னமும் பதில் கிடைக்கவில்லை. உள்ளே மலம்-உடம்பு என்கிற சாக்கில் மனத்திலா மனம் என்ற சாக்கில் உடம்பிலா? எவ்வளவு ஒடிக் கொண்டிருக்கிறது என்பதற்குச் சான்று என்பது தவிர வேறு தெரியவில்லை. “பொய் சொல்றேனா?” அம்மா ஒரு அடி பின்ன டைந்தாள். அவள் பேச்சு திக் கென்ற மூச்சில் தொத்திக் கொண்டு வந்தது. "பொய் சொல்றேனா?” "பொய் சொல்றேனா?” மடேரென விழுந்துவிட்டாள். நான் வெலவெலத்துப் போனேன். 'அம்மா ! அம்மா!” அம்மா தலையைத் துரக்கி மடியில் வைத்துக் கொண்டேன். பேச்சு மூச்சுக் கானோம். "அம்மா! அம்மா !” என் அலறல் கேட்டு மற்றவர்கள் ஓடி வந்தனர். யாரோ அம்மா முகத்தில் ஜூலம் தெளித்து முகத்தை ஒற்றி விசிறியால் விசிறி கண்கள் மெல்ல மலர்ந்தன. "எங்கே இருக்கேன்?" எழ முயன்றாள். என் கையைத் தள்ளி எழுந்து உட்கார்ந்தாள். "என்ன ஆச்சு?” "என்னவோ உளறிட்டேன் அம்மா. அம்மா, என்னை மன்னிச்சுடு.”

  • { ** - - - -

ஒ | ஒ | ஓஹோ !” மூழ்குபவன் பிடியில் அவள் கைகள் என்னைப் பற்றின. "ராமாமிருதம், என்ன சொன்