பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 141 ஆனால் காலை வந்த உடனே டிபன், மத்தியம் சாப்பாடு, மாலை டிபன்- நோகிறதா? வெண்ணெயும் பாலும் வெள்ளமாய்ப் பாய்ந்தன. பதினைந்து நாட் களுக்கு ஒரு முறை நேரே ஆந்திராவிலிருந்தே, டின் டின்னாக, மூட்டை மூட்டையாக, கூடை கூடையாக லாரியில் வந்து இறங்கின. அங்கிருந்தே இறக்குமதியான சமையல் கோஷ்டி, இப்படி ஒரு தீனியில் எனக்குச் சதை பிடித்து, மேனி தனிச் சிவப்பிட்டுக் கொண்டு, அங்கேயே, நான் ப்ரபாத் ஸ்டார் சந்திரமோஹன் ஜாடையில் இருக்கிறேன் என்று சுற்றியிருந்த சில்லறைத் தேவதைகள் சொல்லத் தலைப் பட்டன. Original சினிமாவில் தலையெடுப்பது மிகமிகக் கஷ்டம். சினிமா நடிகன் இவனைப்போல், அவனைப் போல் என டூப்ளிகேட்டாக நினைத்துக்கொள்வதிலோ, பிறர் சொல்லக் கேட்பதிலோ என்ன மகிழ்ச்சியோ! நானும் மனிதன்தானே! வயதின் ஏதோ ஒரு கட்டத்தில் சின்னம்மை, சிரங்கு கண்டு போவது போல, சினிமா சபலம். என்றேனும் ஒருநாள், நானும். அதுவும் சினிமா கம்பெனியில் இருந்துகொண்டு ஆனால் சீக்கிரமே தெரிந்துகொண்டேன். சான்ஸ் இங்கே கிடைக்காது. என் இடம் டைப்ரைட்டர். எதிரே, ஆனால் ஒரு திருப்திபட்டுக் கொள்ளலாம். வந்தே மாதரம், சுமங்கலி, தேவதா படங்களின் Shooting Script களை நான் டைப் அடித்தேன். Long Shot, medium shot, close ub, fade in, fade out, montage, boom shot... trolley shot, trolley in trolley back, cut to, cut. பூரீராம்னாத் எழுதித் தள்ளிய வேகத்துக்கு என் டைப்பிங் ஈடு கொடுக்க முடியவில்லை. அவர் ஏக்தம்' மில் பத்து நாட்களில் முடித்தது, எனக்கு ஒண்ணரை மாதங்களாயிற்று. ★ ★ ★