பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 : சிந்தாநதி கும் ராஜ சமுகம், உள்ளுக்கு இழுத்துவிட்ட நாக்கை வசப்படுத்த முயன்று, தோற்று, தலையை ஆட்டினேன். இடையே நொடியுக மோனம். "ஹாம், நான் ஒண்னு சொல்றேன், கேட்பையா?" தலையைப் பலமாக ஆட்டினேன். சினிமாவுக்குக் கதை எழுதச் சொல்லப் போகிறார் (ரா)ே. "இந்த சகாவசத்தில் உன் Gift உன்னை விட்டுப் போய் விடுமுன், நீ இங்கே விட்டுத் தப்பிச்சுக்கோ. ஆமாம், இது ஒரு பொய் உலகம். இதை நம்பாதே. இது ஒரு உளை, தப்பிச்சுக்கோ." வெளியே போர்டிகோவுக்குள் கார் நுழையும் சப்தம். எழுந்து என் கன்னத்தை லேசாகத் தட்டினார். “Yes, don't abuse your gift.” Ljóróðrøð3, 62(5 &amorib (péeplq soulso துரக்கி, உள் அழகைக் காட்டிற்று. தன்னிடத்துக்குப் போய்விட்டார். நடையில் லேசான விந்தல், அவர் சொல்லிவிட்டால் ஆயிற்றா? அப்புறம் மூணு வருடங்களுக்குப் பின்தான், நான் உதற முடிந்தது. அப்புறம் நான் அங்கு இருந்தவரை நாங்கள் பேசவில்லை. சிந்தா நதியில் ஒரு மந்த கதி,

  • * ● ९:* ళ్ళిళి. ళ్మి•