பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா, ச. ராமாமிருதம் : 147 விலங்குகளின் கர்ஜனையில், கத்தலில், வீறலில் இனம் காணாத அடையாளம், அதன்மூலம் ஒரு உறவு, என் எலும்பில் உணர்ந்தேன். National Art Galleryஇல், ஒவியங்களிலிருந்து, ஆண்களும் பெண்களும் என்னைச் சுற்றி ஆச்சரியத்துடன் பார்த் தனர். "நீ இங்கே எங்கு வந்தாய்? மணிக்கூண்டில் முதன்முறையாக ஏறிப் பார்க்கிறேன். கீழே அலைகள் மத்துக் கடைகின்றன. அலேக்கா என்னைத் துரக்கிக் கடலில் எறிந்துவிடும் போல் காற்று. கப்பலுள் ஏறிப் பார்த்தது இப்பத்தான் முதல் தடவை; அதுவே கடைசித் தடவையும். என்னோடு வந்தாரே ஒழிய, என்னோடு பார்த்தாரா? சொல்ல முடியவில்லை. எப்படியும் என்னைப்போல பார்க்கவில்லை. அது நிச்சயம். நான் காணும் ஆச்சரியங் களுக்கு என் முக மாறுதல்களைப் பார்த்து, என் சந்தோ ஷத்தைத் தன் முறையில் அனுபவிப்பதில் அதிக சந்தோ வும் அடைந்தார் என்று பட்டது. அந்த முறை யென்ன? தெள்ளத் தெரியவில்லையே! உதட்டில் புன்னகை, கண்களில் ஏதோ மருட்சியின் பின்னணியில் லேசான புலர்ச்சி. அவருக்கு என்ன நோய் ஆனாலும், உடல் நோய் இல்லை. மூன்றாம் நாளிரவு, அவரை ரயிலேற்றப் போனேன். வண்டி புறப்பட்ட சமயம்- நகர்ந்துவிட்டது. கூட நகர்ந் தேன், ஒடினேன். அவர் ஜன்னலுக்கு வெளியே கை நீட்டி என் கையில் எதையோ திணித்து, அன்புடன் என் தலையைத் தடவிக் கொடுத்துத் தன் தலையை ஆட் டினார். (டாட்டா இன்னும் இறக்குமதி ஆகவில்லை) ஒட முடியவில்லை. வேகம் அதிகரித்து, வண்டி வளைவில் மறைந்தும் போயிற்று.