பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 149 அவர் பெயர் வெங்கடராம அய்யர். ஆனால் எல்லோ ருக்கும் அவர் அண்ணா அவர்போல் பரோபகார சிந்தை இன்னும் பார்க்கப் போகிறேன். திருவல்லிக்கேணி யில் அத்தை வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவர்களுக்கு அவர் உறவு. . ஆபீஸ் உடையில் சட்டென அடையாளம் தெரிய வில்லை. தலைப்பாகை, கழுத்துவரை பொத்தான் கோட்டு, பஞ்சகச்சம். கணிசமான தொந்தி. "என்னப்பா இவ்வளவு தூரம்?" “வேலைக்கு இண்டர்வ்யூவுக்கு, ப்ராட்வே பக்கம் வந்தேன்.” பொய், ஒ, பொய் சொல்ல எல்லாம் பழக்கிக் கொண்டாயிற்று. ஆனால் காசு கேட்கத்தான் இன்னும் தெரியவில்லை. ஆனால் கேட்காமல் தெரிந்துகொள்வது எப்படி? “எனக்கு ஒரு ரூபாய் தர முடியுமா? ஷார்ட்ஹாண்டு நோட், பென்சில் வாங்கணும். ஒரு வாரத்தில் கொடுத்து விடுகிறேன்.” உடனே, ஜே.பியிலிருந்து ஒரு ரூபாய் எடுத்துக் கொடுத்தார். "ஒரு வாரத்தில் கொடுத்து விடுவாயா?” புன்னகை புரிந்தார். "நிச்சயமா ?” திடுதிடுவெனப் படியிறங்கிப் போய், நேரே, ப்ராட் வேக்குப் பக்கத்து சந்தில் நியூகோமாஸ் ஒட்டலுள் துழைந்து தனி மேஜை பார்த்து உட்கார்ந்தேன். “ஒரு ப்ளேட் கேலரி, மைசூர் போண்டா சாம்பார், அப்புறம் ஒரு ரவா ஆனியன் முறுகல்- ஆர்டரைக் கொடுத்துவிட்டு நாற்காலியில் பின்னுக்குச் சாய்ந்ததும் அப்பா, மனதுக்கு என்ன அமைதி, என்ன இதம் ! பதினைந்து நாட்களுக்குப் பின்தான் நாங்கள் ஒருவருக்கொருவர் கண் பட்டோம். அவர் அத்தையோடு