பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 153 எண்ணும் கைதிகளுக்கும், வெளியே விடுதலையாகித் திரிபவர்க்கும் வேறுபாடும் இதேபாடுதான். 'எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி, நெஞ்சத்தைப் புண்ணாக்கி." "எல்லோரும் இன்புற்றிருக்க எண்ணுவதன்றி வேறேதும் அறியேன் பராபரமே.” அவ்வப்போது என்னை எச்சரிக்க, ரrாமந்திரமாக அழைப்பதுடன் சரி. புண், புண், புண், மனம் சல்லடைக் கண். புழுங்கிப் புழுங்கி உள்வேகப் புழுக்கச் சால். மனதை வெற்றி கண்டேன் என்று நினைக்கும்போதே காலை வாரிவிடும் மனம். நான் எழுத்தை அப்யசிப்பவன். எண்ணாத எண்ணங் கள் என்னை ஊடுருவாமல் இருக்க முடியாது. முறையான எண்ணங்களையே எண்ணும்படி, மனதை வாய்க்கால் படுத்துமளவுக்கு, உண்மையிலேயே மனதை ஆட்சி கொண்டவனும், அதன் சாக்கடைகளில் உழலா மல், அதன் பிலங்களினின்று வெளிப்பட முடியாது. மனத் துய்மையை அடைந்தவனே எண்ணாத, எண்ணத் தகாத எண்ணங்களை எண்ணியவன். மனம் வேறு, நான் எனும் பிரக்ஞை வேறு எனும் விவாதத்துக்கு என் பதில் மனமெனும் திசைமானியி லாது, என் பிரக்ஞையை அடைவதெப்படி? மனமெனும் சைத்தான், சம்பு, பழுதை, பாம்பு, மலம், மலர், நகரம், சொர்க்கம், மனமெனும் மதி, மதியே விதி. எண்ணற்ற நாமங்கள், எல்லையற்ற உருவங்கள். மனதின் ஆகாயத்தில் அதன் நாமங்கள் நீந்தியபடி,