பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 & சிந்தாநதி அதன் ஜபமாலை, ஒருசில சமயங்களில், இதுபோல் காலடியில் கயிறாக விழுந்து கிடக்கிறது. ★ 责 ★ அட்லாண்டிக்கில் விழுந்த விமானம்- பத்து நாட்களாக யாவருக்கும் அது நினைப்புத்தான். இறந்தவர் போய்விட்டார்கள். நான் சமாதானம் சொல்லவில்லை. நெற்றிக்கண்ணே நிலாவென்று நினைக்கும்படி வெம்மையில் எரியும் அவரவர் விட்டுச் சென்றவர்களின் வயிற்று நெருப்பு அடங்க எந்நாள் ஆகுமோ? அப்பவும் அணையுமோ? முதல் அதிர்ச்சி, முதல் பயங்கரம், முதல் தன்பயம், மனம் தன் சிதர்களை ஒருவாறு சுட்டிக் கொண்டதும் எழுவது. - இந்த அத்தனை உயிர்களும் எங்கெங்கோ தங்கள் தனித்தனி வாழ்வுகளை வாழ்ந்தும், இந்த விமானத்தில் தங்கள் ஒருமித்த முடிவுக்கு ஒன்று சேரும்படி, அவரவர் தனித்தனி விதிகள் திரித்துக்கொண்ட பின்னலில், ஒரு உறவு. நம் எண்ணத்தை மீறியதோர் சாக்ஷாத்கார உறவு தெரியவில்லை : 袭 மதியே விதியாகும் மனதின் அகண்ட உறவு. எண்ணி எண்ணி, நொந்து, நைந்து நைந்து, எல்லா வற்றையும் தன்னுள் உறிஞ்சிக் கொள்ளும் பஞ்சு மனம். மனமே, நெஞ்சுகிறேன்; ஒருகணம் துஞ்சாயோ? ★ ★ - ★ மனம், புத்தி, சித்தம், உணர்வு, உள் உணர்வு, நெஞ்சு உரம், ப்ரக்ஞை, ஸ்திதப்ரக்ஞை- அத்தனையும் எல்லை யற்ற துாரங்களினின்று ஆசை காட்டும் கிரஹங்கள். மண்டையைப் பிய்த்துக் கொள்கிறேன்.