பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 சிந்தாநதி உயிர்ச்சக்திக்குத் தோன்றிய உருவுக்கும், அது கிளைக் கும் அதிர்வுகளுக்கும் தடை கட்டச் சாத்தியமா? வடிவம் என்பதே ஒரு வடிகால் தானே! ஆசை, பாசம், காமம், காதல், வேட்கை, பிரியம், ப்ரேமை, ராக், 10WE passion, கலை, தாபம், காவியம், கற்பனை, யுகம், யோகம், ஆக்கல், ஆகல், அழித்தல், அழிதல்- உன்னுள் வெகுண்டெழும் வேகத்தின் சாயல்கள், சாயங்கள், சாயைகள்; உன் மண்டையில் ஊறிக்கொண்டிருக்கும் மாணிக்கத்தின் பிம்பங்கள், இத யத்தில் புத்தியைக் கூர் தீட்டுகையில் உயிர்ச் சாணை யிலிருந்து பறக்கும் பொறிகள் வடிவமே அந்தச்சாணை. நட்ட கல்லைத் தொழுவாய், உயிர் குடிக்கும் பாம்புக் குப் புற்றில் பால் வார்ப்பாய், வடிவம் உன் இனம் தாண்டி இருக்கலாகாதா? இது மட்டும் வக்கிரமா? வக் கிரத்துக்குப் புத்தியின் இலக்கணத்தை உடைப்பில் எறி. விண் விண் விண்- இதயத்தின் பொளியலே! என் உயிருக்குக் கண்ட புற்றே! புரிய பாந்தவி! மாரீச! எழுந்திரு. அம்பு பட்டு நீ விழுந்த இடத்தி லிருந்து உன் மருமான் உன்னை மீட்டானா? அப்படி விவரம் இருப்பின் அதை நான் அறியேன். உனை ஒன்று கேட்கணும். எனக்கும் மான்ரோக் கண்டு இருக்கிறது. ஆனால் என் ரோகம் nதையின் மோகத்தைக் காட்டி லும் மகத்தானது. என் மான் மாரீசமற்றது. ஆகவே எனைப் பீடித்திருக்கும் ஏக்கத்தின் மேல் ஆணையாக, எழு என்றால், எழு, ஆ! மாரீச, இது உனக்கும் எனக்கும் இடையேதான். இது ராமாயணத்தில் காண முடியாது-எட்டவும் கிட்டவுமாய் அவளுக்கு நீ ஆசை காட்டினபோது ஒரு சமயமேனும் அவள் உனைத் தொட நேர்ந்ததா? அவள் உன்னைத் தொட்டிருந்தால், நீ அவளுக்குக் கிட்டியிருந்தால் ?