பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 & சிந்தாநதி அப்பாவின் கடைசி நேரம் பற்றி விசாரித்தேன். முறைதானே! - "மூணு நாளா சீஷ்மம் கட்டி யிழுக்குது. அந்த மூணு நாளும் எனக்கு I.T.லே தேர்வுப் பரீrை. முதல் ரெண்டு நாள் சமாளிச்சுட்டேன். மூனா நாள் விடிகாலை கையைக் காட்டிக் கூப்பிட்டாரு. அந்தரு உன்னாரு.” "இதுகோ சூடு, ஒக்க கனடானி தாங்காது. ஆனால் இதை எனக்குக் கடைசி நேரம் கொடுக்கற வரமா நினைச்சுக்கோ. நீ அவசியங்கா பரீrை எழுதியாவணும் எனக்கா நின்னுட்டே, ஒரு வருஷம் அனாவசியங்கா வேஸ்ட் என்னை நாளைக்கு எடுத்தா ஆவாதா? உயிர் போனப்பறம் ஏமி உந்தி? எப்பவோ போ வேண்டியவன் தானே? ஆனால் நேனு செச்சிப் போயினானுனு நினைக்காதே. எழுதறியா இல்லையா, உன் பின்னாலே தின்னுட்டுப் பார்த்திருப்பேன். மன ராஜு, மன லால்!” "இந்த உத்தரவை மீறி முடியுமா பாபு:" என் முன் ஒரு தோற்றம் எழுகிறது. இவன் இங்கே பரீrை எழுதுகிறான். அங்கே அவர் கிடைக்கிறார். தலைப் பக்கம் ஊதுபத்தி, கால் பக்கம் சாம்பிராணிப் புகை. சுற்றும் குவிக்க, ஐஸ் கிடைத்திருக்குமா? கிராமம் ஆச்சே! மாலை சார்த்தியிருப்பார்களா? பக்கெனச் சிரித்தான். "ஆனால் நான் பரிகை ஆவல்லே. ரெண்டு மார்க்கிலே போச்சு.” அவள் ஆளைப் பதப்படுத்தும் விதம், அவள் விளை யாட்டின் விபரீதம், அவளுக்கே பிரீதி. மானுடத்தின் நேர்த்தியை எப்படியெல்லாம் ஒளித்து, அடுத்து வெளிப்படுத்துகிறாள்! சிந்தா நதியில் மிதந்து வந்த ஒரு அகல் விளக்கில், திரிப் புகைச்சல்.