பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 173 பூட்டை மாற்றிக்க வேண்டியதோடு சரி. இன்னிக்கே இப்பவே." என்னை ஒரு முறை முறைத்துவிட்டு இறங்கிப் போய் விட்டார். மறுநாள் காலை காப்பி வேளை. என் காப்பி வேளை ஐந்தரை மணி, மாடியில் டெலிபோன் மணி அடித்தது, கையில் தம்பளருடன் மாடிக்குச் சென்று டெலிபோனை எடுத்தேன். "நான்தானுங்க, உங்க பிள்ளைங்க' குரல் கஞ்சியாகக் குழைந்தது. “சாமி நல்லாயிருக்கீங்களா? "பிள்ளைவாள், என்ன வாச்சு? ஸ்டேட் பாங்கிலிருந்து எந்தத் தகவலும் காணோம்?" “அதெல்லாம் மறந்துடுங்க புருஷ ன் பெண்சாதி சண்டை ஒரு சண்டையா?” அவர் குறிப்பிட்ட பாவனையில் அவரைக் கற்பனை யில் நினைத்துப் பார்த்தேன். உடம்பு குலுங்கலில் காப்பி மேஜைமீது சிந்திற்று. - டெலிபோனை வைத்து விட்டேன். சிந்தா நதியில் ஒரு எறிகல். o ● సా W. •