பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 குருக்ஷேத்ரம் இது ஒரு diplomatic visit. இதில் உண்ர்ச்சிப் பிசுக்கு இருக்க முடியாது. வேஷத்தோடு சரி. என்னைப் பொறுத்தவரைதான் சொல்கிறேன். நியாயமாக எங்கள் மேலதிகாரி போயிருக்க வேண்டும். ஆனால் அவனுக்குத் தலைமை ஆபீஸில் ஒரு Conference. எனக்கு மேல் படிகளில் பதுமைகள் இருந்தன. ஆனால் ஏனோ அவன் என்னை நியமித்துவிட்டு, டில்லிக்கு ப்ளேன் ஏறிவிட்டான். ஆபீஸில் யார் போவதென்ற மொசமொசப்பு ஒய்ந்தது, தீர்மானமாகி, அன்றிரவு நான் வண்டியேறிய நேரத்துக்கு அந்த ஊருக்கு ரயில் அடிக்கடியில்லை, சுலபமா யில்லை. இடையில் மாறியாகணும் வேறே. போய்ச் சேரும் நேரத்துக்கு எடுத்திருப்பார்கள். ஏதோ ஒரு "சான்ஸ்.' போகும் வழியில், இறந்தவனைப் பற்றிச் சிந்தனை இயல்புதானே! கோயமுத்துாரில் மூணு மில், மதுரையில் ஒன்று. பெண்ணாடத்தில் ஒரு ஆலை. கொடைக்கான லில் ஒரு பங்களா, ஊட்டியில் ஒரு Cottage. பம்பாய் தாஜ்'இல் காயமாக வாடகைக்கு ஒரு Suite இப்படி