பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 சிம்னி

ெTருங்கள், எல்லோரும் வாருங்கொளேன்.

"எல்லோரும் மதுரைக்கு வாருங்கள் என்று முன் னெல்லாம் மதுரை சோமு பாட்டுப் பாடி அழைப்பார். ஆனால் நான் உங்களை அழைப்பது எனக்கு சாகூவிக்கு. என் எசமானி கோபத்துக்கு ஆளாகிவிட் டேன். என்னைப் பொத்துவதற்கு யாரேனும் வேணும். அவள் வயதில் அவளுக்கு எப்படியும் கை ஓங்கித்தானே விடுகிறது! சொல் சுளிப்பு அதற்கெல்லாம் இப்போ நான் லாயக்காயில்லை. சத்தியமா யாரேனும் விட்டேன்னு சொல்லுங்கோ, என் வயதில் நான் சத்தியம் வைக்கக் கூடாது. ஆனால் நான் இப்போ என் வயதில் இல்லை. ("ஆமாம் வயசாயிடுத்தோன்னோ? இப்ப எல்லாம் வேளைக்கொரு வயசில்லையா உங்களுக்கு?”) ஆனால் அது உடையும்னு கனாவில் கூட நான் எதிர்பார்க்கல்லே. எதிர்பார்த் திருக்க முடியாது. "எந்தக் கனா? ராக் கனாவா, பகல்லே உக்காந்துண்டே துரங்கி வழியறேளே அந்தக் கனவா?”) இதோ பாருங்கோ, சூள் கொட்டாதேங்கோ, கொஞ்சம் பொறுமையா யாரேனும் ஒருத்தர் செவி கொடுங்கோ. இங்கே மழைக் காலம் வந்துட்டாலே