பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 191 கடைசியுமதுவுமா இது வேற பச்சாவா? என்னென்ன தான் அவன் சுமப்பான் இருக்கறதெல்லாம் குடும்பத் துக்கே கொடுத்துடறான்! (ஹாடும், சிரிப்பதா, அழுவதா?) நிஜம்மா எனக்கு அழுகையா வரது.” அழுதாள். நான் என்ன செய்ய முடியும்? நியாயம் அவள் பக்கம் இருக்கிறது. "இவா சிம்னி துடைக்கல்லேன்னு யார் அழுதா? பொழுது போகல்லேனா, வழக்கம்போல், மேடையில் மல்லாந்தபடி விட்டத்தைப் பார்த்துண்டிருக்கிறதுதானே! அங்கேதான் இவாளுக்குக் கதை கதையா வருமே!’ அவள் சொன்னதுமே ஞாபகம் வந்தது. எனக்கு இடுப்பு விட்டுப்போறது. மேடையில் மல்லாந்து, உடம்பை நீட்டிவிட்டேன். நீ சொன்னபடி உண்மையி லேயே நான் வேறு என்ன செய்ய முடியும்? விட்டத்தில். உடைந்த சிம்னி துண்டுகளாகப் படவில்லை. அழகிய இரண்டு பெரிய சுருண்ட இதழ்கள். (எழுத்தாளரோன்னோ? தனியாத் தோணறதாக்கும், செஞ்ச காரியம் ஜரிக்க!) அதுதான் விட்டத்தின் மஹிமை, கேலி பண்ணுவோர் பண்ணட்டும். உடைந்தது அவைகளுக்கே தெரியக்கூட நேரமில்லை. ஒரு தினுசான திக்பிரமையில் இருந்தன. பூமியில் விழுந்த சிசுப்போல், அழவில்லையே தவிர "குவா! குவா!' (எங்கே? எங்கே?) அவைகளின் திக்கற்ற நிலையினின்று ஒரு துக்கம் என்னைத் தொற்றிக்கொண்டது. விட்டத்தில் இன்னும் ஏதோ தெரிகிறாப் போலி ருக்கே!