பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 193 ஆனால் அந்த brightnessக்கு என்னால் மார்க்கு வாங்க முடியாது. அதன் வழியே பார்த்தால் மார்பு மட்டுமா தெரியும்? மனசே தெரியும். பிள்ளையாண்டான் இன்று லேட்டாகத்தான் வந்தான். ஆபீஸ் சகா ஒருத்தன் இன்று காலை ஆபீசுக்கு வரும் நிமித்தத்தில் எலெக்ட்ரிக் ட்ரெயினில் விபத்து ஆனதாகத் தகவல் வந்து ஆபீஸிலிருந்து ஒரு பாட்ச்' அவனைப் பார்க்கப் போயிருந்ததாம். போனதும் கதவைத் திறந்து வரவேற்றவனே அவன் தானாம். 'இந்த அதிசயத்தை எல்லாரும் கேளுங்கள். கேட்கணும். சேத்துப்பட்டுக்கும், நுங்கம்பாக்கத்துக்கும் இடையில் ஸிக்னல் மாறுவதற்காக வண்டி நின்றது. இவன் கீழே அந்தண்டைப் பக்கமாக இறங்கி ஏன் இத்தனை நாழியென்று முன்னும் பின்னுமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கையில், எதிர்வண்டி- அதுதான் விளக்கெண்ணெயில் வழுக்கினால்போல் வருமே- பின் புறமாக வந்து இடித்து, ட்ராக்கின் ஒரமா ஒரு பள்ளத் தில் துரக்கியெறிந்து விட்டுப் போயிடுத்தாம். கூடவே இவன் வண்டியும் கிளம்பிப் போயிடுத்தாம். ஆகவே இந்த accident நேர்ந்ததே யாருக்கும் தெரியாதாம். இவன் இசைகேடாகப் பள்ளத்தின் குறுக்கே பாலம்போல் விழுந்து கை காலை அசைத்து எழுந்திருக்க முடிய வில்லை. நினைவு தப்பிப் போயிருக்கும்னு தோணறது. எத்தனை நேரம் அப்படிக் கிடந்தானோ, எத்தனை வண்டிகள் பாஸ் ஆச்சோ- தெரியல்லே. "தற்செயலா, ட்ராக்கை இன்ஸ்பெக்ட் பண்ற வேலையிலே வந்துகொண்டிருந்த இரண்டு ரயில்வே aேng ஆசாமிகள் இவனைக் கண்டு, தூக்கி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று, அப்புறம் வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தார்களாம். அந்த ஷாக்கைத் தவிர, சிராய்ப்பு கூட இல்லையாம்!” சி ந - 13