பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 சிந்தாநதி குற்றங்களுக்கும் நியாய எடை, வாரெடை, தங்க எடை, சமய எடை, யானை எடை, கால எடை, காலத்துக்கும் எடை, மத்யஸ்த எடை- இவையெல்லாம் உண்டென்றால் உண்டு. இல்லையென்றால் இல்லை. ஆனால் இழைத்தவனின் சொந்த எடையின் உண்மையை மிஞ்ச எதுவுமில்லை. குற்றங்கள்-ஒப்புக் கொண்டவை, வெளியானவை, கையும் பிடியுமாகக் கண்டு பிடிக்கப் பட்டவை, விசாரணையில் குற்றமெனத் தீர்மானவை. இழைத்த சமயத்தின் நிலையிலேயே அவை நின்றுவிட வில்லை. அவை தாருக்கள். உணர்வே அவைக்குப் பாசனம். அவை அவையின் தனித் தனிக் காலக்ரமத்தில் கவிதையாக மலர்கின்றன. கொடுக்காய்க் கொட்டுகின் றன. புண்ணாக விண் விண் தெறிக்கின்றன அல்லது மறதியின் சருகுகளடியில் சலசலப்பு மட்டும் நம் வியப்புக்கு, புரியாத விசனத்துக்கு, இனம் தெரியாத அச்சத்துக்கு, உள்ளுணர்வில் கேட்கிறது. குற்றம் செய்யாதவன் இல்லை. குற்றங்கள் பல அறி யாமலே நேர்கின்றன; இழைக்கப்படுகின்றன. என்றோ இழைத்த மாண்டவ்யம் மறந்துகூடப் போய்த் திடீரென அதன் ஆணி முளைத்து அதில் கழுவேறுகையில் வாழ்க்கையை நோகிறேன். பிறரைக் குற்றம் சொல் கிறேன். கர்மா theory யைக் கரை காண்கிறேன். புண்ணிய, பாபம், பூர்வ ஜன்மாக்களைப் படி போட்டு அளக்கிறேன். “லாபம், ரெண்டு.” ஒவ்வொரு செயலுக்கும் பிரதிச் செயல் உண்டு என chemistry ருசுப்படுத்துகிறேன். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என மற்றவனுக்கு நீதி போதித்து அவன் வினைக்கு உள்ளூரக் கொக்கரிக்கிறேன்.