பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 & சிந்தாநதி பூனையாகிவிட்டேன். அண்ணா கரைத்துப் போட்டிய தற்குக் காரணங்கள் உண்டு. அது பிரிட்டிஷ் ராஜ் காலம். வயிற்றுப் பிழைப்புக்கு ஆங்கிலத்தை நம்பியிருந்தோம். மற்றும் அற்புதமான பாஷை, உலகின் எல்லா பாஷை களையும் ஒசைகளாகவும், சொற்களிளும், பாவங்களை யும் ஸ்வீகரித்துக்கொண்டு, எப்பவும் வளர்ந்து கொண்டே, ஜீவ நதியாகப் பாய்ந்து கொண்டிருக்கும் பாஷை. "என்னவோ பொய், பொய் என்று புழுங்குகிறாய்! நீ அப்படியே நிஜத்தின் பொக்கிஷமா? இரண்டுமே மாயையின் சலனங்கள். ஒரே பொருளைப் பார்க்கும் இரண்டு கோணங்கள். ஒருவனின் பொய், மற்றவனுக்கு மெய். காலத்தோடு ஒத்துப் போகாதவனின் கவைக்குதவாப் பேச்சு.” தர்க்கங்களை மேலும் மேலும் சரக்கூடாகக் கட்டும் போ ன்மேலேயே கனக்கச் சந்தேகம் வங்கவிடுகிறக. இi, المتب: رينا நிது நேர்மை அற்றதே நியதியாக மாறிக்கொண்டிருக் கிறதா? நேர்மை எதற்கு? நேர்மை என்பதே என்ன? பயம்-மனிதன் ஒருவனை ஒருவன் ஆளும் கோல் பலம்- அதுதான் நேர்மையா? ஏதேதோ சொல்லுக்காவும் லகவியங்களாகவும் வாழ்ந்து காட்டிய நம் காவிய, இதிகாச, புராண நாய கர்கள் வியர்த்தமா? "இவைகளிலிருந்து கோட்பாடுகள் காட்டிக்கொண்டு, எங்களை மிரட்டிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மடிசஞ்சிகள் உங்கள் காலம் நெருங்கி விட்டது. எண்ணத்தின் சுயேச்சை (Free Thinking) உங்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியாச்சு."