பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 & சிந்தாநதி 'இல்லேண்ணா, கேளுங்கோ, நான் கதையைச் சொல்லட்டுமா?” நான் சொல்லிக்கொண்டே வர வர, அண்ணாவின் முகத்தில் ஒளியும் நிழல்களுமாக மாறி மாறி அடித்துக் கொண்டிருந்தன. ஒருவாறு நான் சொல்லி முடித்ததும்கிட்டதட்ட ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்- அண்ணா ஏதோ ஒரு மாதிரியாக என்னை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த மெளனம் ஏதோ ஒருவிதத்தில் பயமாக இருந்தது. புத்தகத்தை மூடி என் மடியில் வைத்தார். 'Boy; இனிமேல் இங்கிலீஷில், நான் சொல்லிக் கொடுத்து, நீ கற்றுக்கொள்வதற்கு என்னிடம் விஷயம் இல்லை.” எனக்கு அப்போது வயது பன்னிரண்டு. எந்தத் தகப்பனார் இப்படித் தன் மனம் திறந்து காட்டுவார்? ஒரே நிறம், ஒரே Size, அடையாளம் தெரியாதபடி கசப்பு மருந்து பில்ஸ்களும், தித்திப்பு மிட்டாய் வில்லை களும் கலந்துவிட்டன. பஞ்சமம், மந்தரம் இன்னும் ஏதேதோ ஸ்ருதிகளும், ஸ்வரங்களும் ஒரே சமயத்தில் நினைவின் யாழ் மீட்ட லில் தாமே வெளிப்படும் விந்தையை என் சொல்வது? மீட்டலுடன் நான் சரி. ஆம், இந்த ப்ரஸ்தாரம் ஏன் இன்னும் முத்தாய்ப்பு காணவில்லை ? மந்திர யாழ்.