பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஒரு பொய் பிற்பகல், சுமார் இரண்டு மணி, வெய்யில் பிளக்கிறது. கிராமத்து வெய்யிலுக்குக் கேட்பானேன்? வழக்கம் போல், திண்ணையில் எநக்குப் பாடம் நடந்துகொண் டிருக்கிறது, கணக்கு. அந்த வேளைக்கு அண்ணா ஒண்டிக்குத்தான், கற்றுக் கொடுக்கும் தீவிரம் இருக்க முடியும். என்னைப் பற்றிக் கேட்க வேண்டாம். வாசலுக்கு எதிரே மைதானத்தில் ஒரு ஒரமாகக் காவல் காக்கும் கருவேல மரத்தின் கிளைகளினூடே, கானல் நலுங்குகிறது. பூமியில் ஒரு மணல் திட்டில், வெள்ளைக் கற்கள் கண்ணாடித் துரள்களாகப் பளபளக்கின்றன. ஒரு ஒற்றை மாட்டு வண்டி, மைதானத்தின் மேடு ஏற முயன்று கொண்டிருக்கிறது. "ட்ரியோ, ட்ரியோ ஹாய்; ஹோய்!” இந்தச் சமயம் என்னைவிட்டால், நான் ஒடிப்போய்ப் பின்னால் நெற்றியை முட்டுக் கொடுத்து, வண்டியைத் தள்ளுவேன். மேடு ஏறினதும், சட்டென வண்டியில் ஏறி உட்கார்ந்து கொள்வதில் எத்தனை குஷி கொஞ்ச தூரம் சவாரி கிடைக்கும். இரண்டு திண்ணைகளுக்குமிடையே, வாசற்புறத்துக் கட்டாந்தரையில், அம்மா பாக்கை உடைத்துக்கொண் சி ந - 14