பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 & சிந்தாநதி சின்னப் பொய்யில் ஆரம்பிச்சதை இப்படியே விட்டுட்டா- இல்லை. இதைப் பற்றித் தொடர்ந்து பேச எனக்குப் பிடிக்கல்லே. நீ உணர்ந்துண்டா சரி.” சிரியத்தோடு பி.கு. அதுகூட ஒரு அம்சமோ? அண்ணா எப்போ வருவா? நானே எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன். வர வழியில் அண்ணாவுக்கு ஏதானும். கவலையே வந்துவிட்டது. ஆகவே, அண்ணா உள்ளே நுழைந்ததும் நுழையாதது மாய், அவரிடம் ஒடோடியும் சென்று. "அண்ணா, நான் பாக்குத் தின்னலேன்னு சொன்னது பொய்!” என்று சொன்னதுமே, அந்த முகத்தில் மேகம் கலைந்து வெளிப்பட்ட உதயம்- அப்பா! எனக்கும் மார்பிலிருந்து ஒரு பெரிய கனம் இறங்கி. அம்மாடி! இந்த லேசு என்ன சுகமாயிருக்கு! நெஞ்சை அடைச் சுண்டு அண்ணா மேல் திடீர்னு ஒரு ஆசை ஏன் இப்படிப் பொங்கறது: அன்றிரவு வாசல் திண்ணையில், நாங்கள் படுத்துக் கொண்டு, அண்ணாமேல், சொகுலாய் நான் காலைப் போட்டபடி: 'ஏன் அண்ணா, நீங்கள் பொய்யே சொன்ன தில்லையா?” "அதெப்படிச் சொல்ல முடியும். No Man is perfect பொய் சொல்றதுக்கு அடிப்படைக் காரணம் பயம். உன் வயசில் நான் சந்தோஷமாயில்லை. பல காரணங்கள். வயிற்றுக்கு ஒழுங்காக இல்லை. பெரியவாளின் பரிவும் இல்லை. அந்த நாளிலே வீட்டுக்குப் பெரியவர்கள் தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தினால் பையன்கள் மதிக்க மாட்டார்களே என்று அவர்களுக்கு ஒரு பயம். பிரிய மான வார்த்தைக்கு நாங்கள் ஏங்கிக் கிடப்பதை