பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

نه லா.ச.ராமாமிருதம் & 217 வலித்துக் கொண்டிருந்து. நம்பினால் நம்புங்கள், நம்பாவிடில் போங்கள். நானே இப்படி என்றால், அம்மாவைப் பற்றி என்ன சொல்ல ? ஆனால், அவள் வாழ்ந்த முறையில்தான் தெரிந்தது. துக்கம் கொண்டாடுவதற்கு அல்ல. அதற்கு முதுகு காட்டி ஒடுவதற்கும் அல்ல. மார்பில் தாங்கிக் கொள்ளும் கதை அடி. பொருளாதாரம் படு மோசமான நிலையிலிருந்தது. குடும்ப நிர்வாகம் அம்மாதான். பிழைத்தேன். மருதாணி மரத்தை ஒட்டி, எட்டு, ஒன்பது அடி நீளத்துக்கு ஒரு சுவர் மாரளவு உயர்த்துக்கு ஒடிற்று. சுமார் ஐந்தடி தள்ளிப் பக்கத்து வீட்டுச் சுவர் உயரமாக எழும்பிற்று. இந்தச் சுவரின் அர்த்தம் என்ன? இந்தச் சந்தின் உபயோகம் என்ன ? வீட்டுக்காரனைக் கேட்டோம். "யார் அம்மா கண்டது? ரொம்பப் பழைய வீடு. அந்த நாள் 2enanaவில், இதுக்கு என்ன வேலையோ?” எங்கள் வீட்டுக்காரன் அழகன், அப்பா, என்ன நிறம்! அவனுடைய சொந்தப் பெயர் தெரியாது. ஆனால், அவனை அழைக்கும் பெயர் குலாப், நல்ல பாஷை, நல்ல மரியாதை. அம்மா தன் உதட்டின்மேல் இரண்டு விரல்களை வைத்தபடி அந்த இடத்தைச் சிந்திப்பதைப் பார்த்திருக் கிறேன். பற்றுத் தோய்த்து வீடு பெருக்க அமர்த்தியிருந்த பங்கஜத்தின் புருஷன் வரதனும் அம்மாவோடு நின்று அந்தச் சந்தைச் சிந்திப்பான். பங்கஜம் குள்ளமாக உப்பின கன்னங்களுடன் எப்பவும் சிரித்த முகம். மார்க்கனம் தாங்க முடியலேன்னு