பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 z சிந்தாநதி என் பிள்ளைய்ாண்டான்களை எத்தனை முறை எடுத்து விட்டிருக்கிறாள்! அத்தனைக் கத்தனை வரதன் முற்றின முருங்கைக்காய் மாதிரி, உயரமாக, உடம்பு நரம்பு முடிச்சுகளாக வற்றி, கன்னங்கள் ஒட்டிப்போய், முட்டிய மோவாய், பெரிய விழிகள், சதா வெற்றிலையைக் குதப்பிய வண்ணம். "ராமாமிருதம். ஒரு இருநூறு ரூபாய் பிரட்டிக் கொண்டேன்! இரண்டு மூன்று மாலங்களில் திருப்பி விடறேன்.” “எதுக்கு அம்மா p” பின்னாலே சொல்றேனே, உன்னிடம் மறைக்கப் போறேனா?” ஒரு நாள் மாலை ஆபீஸிலிருந்து கிளம்பி வந்ததும், உள்ளே நுழைந்ததும், “அம்மே!” என்று ஒரு குரல் மருதாணி மரத்தை அடுத்த சுவரின் பின்னாலிருந்து வரவேற்றது. ஸ்தம்பித்து நின்றேன். "வாடாப்பா என்னருமைக் கன்னுக்குட்டி! என்றாள் அம்மா. கிண்டலாக தோள்மேல் அணை கயிறுடன், பால் வழியும் சொம்புடன், வரதன் பின்னாலிருந்து வெளிப்பட்டான். "சாமி, நீங்க இப்போ முதலாளி!” வரதப்ப நாயுடு பால்கார இடையன், என்னுடைய சஸ்பென்ஸ் எப்படி? அதைவிட அம்மா எனக்குக் காட்டிய சஸ்பென்ஸ் எப்படி? இரண்டு வாரமாக, வீட்டில் மற்றவர்களும் அம்மா வின் ரகஸ்யத்துக்கு உடந்தை,