பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 & சிந்தாநதி But aij things must have an end, even good things, ஒரு நாள் வக்கீல் நோட்டீஸ் வந்தது. "சொந்தக் காரனுக்கு வீடு தேவைப்படுவதால், இன்னும் இரண்டு மாதங்களில் இடத்தைக் காலி செய்து கொடுக்க வேண்டும். இல்லையேல்." இல்லையா, இத்யாதி. யார், குலாப்பா? "ஆமாம், ஏன் கூடாது? ஏன்ய்யா, வீட்டுக்காரன் அனுமதியில்லாமல், நீங்கள் மாடு கட்டிக்கொண்டால் என்ன நியாயம்? வாடகையேனும் கூடக் கொடுக்க வேண்டாமா?” என்று கேட்கிறீர்களா? குலாப்பும்தானே எங்களிடம் பால் வாங்கிண்டான்? தாங்கள் வந்தபோது கொடுத்த வாடகை ரூ.80/-கடைசி யாகக் கொடுத்த விகிதம் ரூ.150/- அந்த நாளில் அது அநியாய வாடகை என்று தான் சொன்னார்கள், மாட் டுக் கொட்டகைக்கும் சேர்த்துத்தான். உண்மைக் காரணம், அவனுக்கு ஆகவில்லைஅவனுக்குத் தோன்றாமல் அந்தச் சந்தை நாங்கள் பயன்படுத்திக் கொண்டது. எது எப்படியிருந்தால் என்ன? வீடு அவனுடையது தானே! இரண்டு வருடம் கோர்ட்டில் இழுபறிக்கலாம். ஆனால், என்றேனும் ஒரு நாள். அந்த நாளும் வந்து விட்டது. மேற்கு மாம்பலத்தில் இடம்பிடித்தேன். திருவல்லிக்கேணியில் ஊசி குத்த இடம் ஏது: எல்லாச் சாமான்களையும் மாற்றி ஆன பிறகு, கடைசியாக மாடுகள்.