பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 227 இதுவும் சமீபத்தில் வந்த பத்திரிகைச் செய்தி. இஸ்ரேலில் ஒரு ஆசாமி, என் கர்த்தர் என்னை என் சாம்பரினின்று மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்று அறைகூவித் தன்னைக் கொளுத்தச் செய்து, எரிந்து போனவன், அவன் உயிர்ப்புக்குச் சூழ இருந்தவர் எத்தனை நேரம் காத்திருந்தாலும் எரிந்ததுடன் சரி. மேற்கூறிய மூன்று உதாரணங்களிலும், எந்த நம்பிக் கையின் தெம்பில் இவர்கள் உயிருடன் விளம்பர விளை யாட்டில் இறங்கினார்கள்? என் சங்கடம், இவர்கள் கடைசியில் பட்டது உடல் அவஸ்தையா, அல்லது ஏதோ முறையில் அவர்கள் செய்கை அவர்களைக் காட்டிக் கொடுத்துவிட்ட அவமானமா? எதைக் காட்டிலும் எது? பாலயோகியின் அருகே, ஒரு கிருஷ்னர் படமும், கீதைப் புத்தகமும் இருந்தவனவாம். என் பார்வையில், அவர் எய்தியிருந்த முதிர்ந்த யோக நிலையில், இந்தப் பொருள்களின் துணை, உண்மையில் அவருக்குத் தேவைப்பட்டனவா? இந்து மதத்தில், இந்து மதத்தைவிட- ஜைன மதத்தில் உபவாசம் இன்றியமையாத நியதி. ஏன், எல்லா மதங்களிலுமே, உபவாசத்துக்கு முக்கியத்துவம் உண்டு. ஜைனர்கள், பெண்டிர் உள்பட, 35 நாட்கள், 75 நாட்கள் என உண்ணாவிரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். காந்திஜி உபவாசத்தையே அரசியல் ஆயுதமாக எப்படிக் கையாண்டார் என்பது உலக ப்ரசித்தம். நோக்கம் எதுவாயிருப்பினும் சரி, இதுபோன்று நீண்ட விரதத்தை மேற்கொண்டு, அது நிறைவேற்றித் தந்த, தரும் நம்பிக்கையின் தன்மைதான் என்ன? ராமன் என்றும் கிருஷ்ணன் என்றும் தெய்வம் என்றும் சொல்லிவிட்டால் போதாது. இந்தக் கூட்டத்தில் அவைகள் வெறும் பெயர்கள். இதன் முதுகெலும்பு, ததிசம், சத்து, எலன்ஸ் GT5ষ্ঠা দুটয় ?