பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் 8 233 என் தலைவனை நாம் சந்திக்கப் போம் பிரயாணத் தில் என்னை, உங்கள் பாசாங்குக் கண்ணிரிடையே, ஆபாசக் கூக்குரல்களோடு வழி அனுப்ப வேண்டாம். இங்கு இருந்தவரை ஆயுசு பூரா உங்களுக்காக உழைத்தும், இன்னும் உங்களுக்குச் செய்து முடிக்க முடியாத காரியங்களையே நினைவுபடுத்திக் கொண் டிருப்பது உங்கள் வழி. எனக்கு வந்திருக்கும் ஒலையே, என் பிராயண வழிக்கு ரகூடிாபந்தன். மானnகமாக என் மணிக்கட்டில் நானே சுற்றிக் கொள்கிறேன். அதில் எழுதியிருக்கும் ரகrா மந்திரத்தைப் படிக்கிறேன். 'மனமே கடவுள், மனமே பணியாள், மனமே சத்ரு. மனமே மித்ரு.' கட்டிலின் அஸ்மான கிரியிலிருந்து பக்கவாட்டைச் சுற்றிக் கறுப்புத் திரைகள் இறங்குகின்றன. கட்டில் நகர் கிறது. என் உள்ளங்கை என் கண்ணுக்குத் தெரியா மையிருளில் மிதந்து செல்கிறேன். இது கட்டிலா? மீண்டும் என் தொட்டிலா? படிக்கக் கிறக்கமாயில்லை ? கவிதையாயில்லை ? ? சாவே சொர்க்கமாயில்லை?? ஆனால், நனவில் வேளை வருகையில் அதைச் சந்திக்க எப்படி வைத்திருக்கிறதோ? சிந்தா நதிமேல் கிறங்கலடிக்கும் கயிறு அறுந்த காற்றாடி.