பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 எல்லாமே சரி "வசுதேவ பாலனே அசுரகுல காலனே நந்த கோபன் மைந்தனே நவநீத சோரனே எழுந்திரும்!” மார்கழிக் குளிர். கம்பளிப் போர்வை அடியில், மோவாய்க்கு முட்டுக் கொடுத்த முழங்கால் வளைவுள் புழுவாய்ச் சுருண்டு கிடக்கும் அயர்ந்த துரக்கத்தைச் செதிள் செதிகளாக, பக்குவமாக, மெத்து மெத்தெனத் துரக்கிக் கலைத்து செவிவழி, உள்ளே உடல் பூரா தேனின் துடிப்பில் அபிஷேகமாக வழிந்து, மாற்று மறு போதை யென அம்மாவின் குரல் அதுவே ஒரு தனிக் கதகதப்பாக. அந்த அதிகாலையில் ஸ்நானம் செய்துவிட்டுப் பாடிக் கொண்டே, அம்மா வீட்டுக் காரியங்களில் வளைய வருகிறாள். கிராமத்து விடிவேளை, குளிர், பட்டனத்தில் இருப்போர்க்கு ஒரு நாளும் தெரியப் போவதில்லை. மார்கழியில் தினே தினே, அந்த வேளைக்குச் சுவாமி விளக்கை ஏற்றினால், அத்தனை புண்ணியமாம். வாசற் கொறடில் பிரமாண்டமான கோலத்தின் நடுவே பூசணிப் பூக்கள். அந்த நேரத்தை, வேளையின் புனிதத்தை, புனிதமே அழகானதை, இந்நாளின் மனப்பான்மைக்கு உணர்த்