பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா.ச.ராமாமிருதம் : 235 தவோ, உறுத்தவோ முடியாது. ஏனெனில், எப்போது விழிப்பு வருகிறதோ, அப்போதுதான் பொழுது விடிவு. அம்மாவின் குரலில் ஒரு திகட்டலான இனிமை உண்டு. குழலின் தன்மை. 'ஏ பையா, எழுந்திரு. இன்றிலிருந்து பதினைந்து நாட்களுக்குக் காலையில் பால் வாங்கி வருவது என் முறை. கூஜாவுடன் கிளம்பு கிறேன். வீட்டிலிருந்து இரண்டு பர்லாங். இடையில் வாய்க்கால் கடக்கணும். பால்காரி ஆதியம்மா, வயது, எண்பது, அண்ணாவைவிட உயரம், தும்பை நரைக் கூந்தல், இரும்புத் தகடுகளாலும் வார்களாலும் முடைந்தாற் போலக் கெட்டி ஒற்றை நாடி உடல். இடையன் பெயர் மொட்டை ஏனோ புரியவில்லை. ஏனெனில், தலையில் காடாட்டம் மயிர், மாடு கறப்பதில் கில்லாடி குவளயில், க்ளிங் க்ளிங் என இனிய ஒசைகளுடன் ஆரம்பப் 'பீர்கள் விழுந்து, அடுத்துக் கோபத்துடன் புஸ் புஸ் என்று சீறிப் பால் துரையுடன் குவளையில் ஏற ஏறக் கோபம் தணிந்து மெத் மெத்தென இந்தக் குணமாற்றம் எனக்கு ஓயாத வியப்பு. அதை இன்னும் நெருக்கமாகக் கவனிக்க, மாட்டின் பக்கத்தில் போனதும், மொட்டை ஒரு காம்பைத் திரும்பிப் பீச்சினதும், அதெப்படிக் குறி தவறாமல், பீறல் நேரே கண்ணுள் விழுந்து, அந்தக் கண்ணைக் கசக்கிண் டிருக்கையிலேயே, அடுத்த கண்ணில் ஒரு பீச்சு. கா:கா!' "இச் : இச் : "கொக்கரக்கோ வாசல்களில் சாணித் தெளிப்பு, மரங்களில் இலை களின் பெருமூச்சு. பூக்களின் சிரிப்பு.