பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் & 239 இதை நான் பார்க்கிறேன். இப்போதெல்லாம் எவ்வளவு கடித்து விழுங்குகிறேன்! விடமுண்ட கண்டன் என்னி டம் தோற்றான். அவன் ஒரு முறைதான் உண்டான். அதையும் விழுங்க விடவில்லை. தொண்டையிலேயே அவனுக்கு நிற்கிறது. நானோ? மத்தியானம் கூடத்தில் உட்கார்ந்திருக்கிறேன். அண்ணாவுக்கு இன்று சாப்பிட்டவுடன் ஒரு சின்னத் தூக்கத்துக்கு நேரம் இல்லை. பள்ளிக்கூடத்தில் இன்ஸ் பெக்ஷ னாம். உடனேயே போய்விட்டார். கோடி வீட்டில் யாருக்கோ உடம்பு சரியில்லையாம்.யோசனை கேட்க, அம்மாவை அழைத்துக்கொண்டு போய் விட்டார்கள். கூடவே கடைசித் தம்பி அவளுடன் ஒட்டிக் கொண்டு போய்விட்டான். எனக்கு அடுத்தவனும், தங்கையும் பட்டணத்தில் சித்தப்பா வீட்டில் இருக் கிறார்கள். எனக்கெதிரே, பாடப் புத்தகங்கள் விரித்துப் போட்டுக் கிடக்கின்றன. ஆனால், இந்த வேளைக்கு என்ன ஏறும்? வீட்டுக்கே திறந்த வாய் போல், வானம் பார்த்த நடு முற்றத்தில் வெய்யில் பிளந்து கட்டறது. மருந்துக்குக்கூட ஒரு மேகத் தேய்சல் இல்லை. கண்ணைப் பறிக்கும் அசை வற்ற, அளவற்ற முழு நீலம், ஒரு பட்சி கூடப் பறக்க வில்லை. வெய்யிலுக்கு பய்ந்து அது அது எங்கெங்கோ ஒடுங்கிக் கிடக்கு. வீடே நடு முற்றத்தைச் சுற்றி நாலு தாழ்வாரங்களோடு சரி. போனால் போகிறது என்று இரண்டு தாழ்வாரங் களில் இரண்டு அறைகள். ஒன்று படுக்க, மற்றது. சமைக்க நள்ளிரவில் ஒட்டு வழி, நடு முற்றத்தில் நாலு திரு டர்கள் இறங்கினால் கேள்வி இல்லை. இதுவரை