பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 : சிந்தாநதி வராததே ஒரு கேள்வி. பகல் வேளையில் அம்மாவுக்கு ஆண் பிள்ளைத் துணை நான்தான். எனக்கு எவ்வளவு பெருமை தெரியுமா? - ஆனால், இப்போ வந்திருக்கும் திடீர் நிசப்தத்துக்கு என்ன அர்த்தம்? இது எப்படி வந்தது? இல்லை, இது எங்கள் இரைச்சல், வீட்டு இரைச்சல், தெரு இரைச்சல், ஊர் இரைச்சல் எல்லாத்தையுமே தாண்டி, ஏற்கெனவே, எப்பவோ முதற்கொண்டு இங்கேயே குடி கொண்டிருக் கும் நிசப்தம்தான். ஆனால், இப்பத்தான், நான் இருக் கேன்னு தெரியப்படுத்துகிறாப் போல, இது திருடன் பயத்தை விடப் பயமாயிருக்கு. கமாச்சிமா கப்சிப், உதட்டு மேலே விரலை வெச்சு உஷார்ப்படுத்தறாப் போல. இப்ப என்னவோ நேரப் போறது. நேர்றதுக்குத் துளும்பிண்டு நிக்கறது. ஆனால், என்ன நேரப் போறது, தெரியல்லே. இதுக்கு உடம்பில்லே. ஆனால் எங்கேயும் ஒரே கண்ணா, என்னையே பார்த்துண்டிருக்கு. என்ன இது? வலது பக்கத்துத் தாழ்வாரத்தில் கிணற்றிலிருந்து வெளிவந்திருக்கா? என்னால் எழுந்து ஒட முடியல்லே. உடம்பை மாத்திரம் இல்லே, எண்ணத்தையே கட்டிப் போட்டிருக்கு, கயிறு இல்லாமலே. இப்போ நானே இருக்கேனா இல்லியா? - என்னவோ ஒரு குமா குமா என்னை முழுங்க வாயைத் திறந்து காத்திண்டிருக்கு. இதோ அதன் வயிற்றுள் போயிடப் போறேன். போயிண்டே இருக்கேன். எங்கோ துரத்தில் பேச்சுக்குரல். குமா மனசில்லாமல் பின் வாங்கறது. தன் உள்ளுக்குச் சுருங்கறது தெரியறது. உதறிண்டு வெளியே ஒடறேன். அம்மா, அவளோடு இன்னும் இரண்டு பேர் பேசிச் சிரிச்சிண்டு வரா. 'அம்மா! அம்மா !!” அலறிண்டு ஓடிப் போய்க் கட்டிக்கிறேன்.