பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 & சிந்தாநதி விளக்கிக்கொண்டு- இதென்ன வகுப்பா நடத்துகிறேன்? எனக்கு ஏதோ மானபங்கமாக இருந்தது. நான் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருப்பேன். அவர்கள் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருப்பார்கள். தங்களுக்குள்ளே, "இந்தக் கதைக்கு இன்ன சன்மானம் கிடைத்தது." "இந்தக் கதையை Editor ®(5£ıe $]& கொடுத்து விட்டார். இன்ன இன்ன மாறுதல்கள் செய்தால் போடு வதாகச் சொன்னார். நாளைக்கு லீவு போட்டுவிட்டு அதான் வேலை.” அவர்கள் எனக்குக் காட்டிய மரியாதைக்குக் குறை வில்லை. "ஆஹா ஜனனி, யோகம், கொட்டுமேளம், பூர்வா, புற்று. இந்தக் கதைகளை உங்களால் எப்படி எழுத முடிந்தது: கற்பனைக்கும் அப்பாற்பட்ட சமாச்சாரம், எங்களால் நினைத்தே பார்க்க முடியாது.” ஆனால், இந்த மரியாதைப் பூச்சுக்கடியில், ஒரு சூக்குமமான எதிர்ப்பை உணர முடிந்தது. 'எழுத்தாம், தன்மானமாம், பிறர் தொடவிடக் கூடாதாம், என்ன இந்த மனுஷன் பிதற்றுகிறான்? இதென்ன கீதையா, வேதமா ? Editer மாற்றச் சொன்னால், மாற்றிவிட்டுப் போகிறோம். இல்லை, அவரேதான் மாற்றிக் கொள்ளட்டுமே, தலை முழுகிப் போய்விடுமா? நம் பிழைப்பைக் கெடுக்கப் பார்க் கிறான்.” துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு ஒருவொருவராக நழுவும் நாள் நெடுந்துரத்தில் இல்லை. ஒரு நாள், நான் மட்டும் குளத்தங்கரையில் உட்கார்ந் திருந்தேன். கோபுர விளக்கு எனக்குத் துணை. சிந்தனைக்கு ஏற்ற சூழ்நிலை தனிமைதான்.