பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4% பாஷைக்குள் பாஷை அம்மாவும் நானும் மதுரை மணி கச்சேரிக்குப் போயிருந்தோம். அந்த ஆபோஹறி ஆலாப், “காணக் கண் கோடி” கடைசியில் "கந்தன் கருணைபுரி வடிவேல்" -என் போதையை யாருடனேனும் பங்கிட்டுக் கொள்ள வேணும் ஆர்வத்தில்: "அம்மா, கச்சேரி எப்படி?” “கூந்தல் உள்ள சீமாட்டி!” அத்துடனேயே நிறுத்திக் கொள்ள இருந்தவள், என் திகைப்பைக் கண்டு, தயவு புரிகிற மாதிரி: "கொண்டை போட்டுக் கொள்ளலாம். பின்னித் தொங்கிவிட்டுக் கொள்ளலாம். ஒண்ணுமே. வேண்டாம், வெறுமென அள்ளிச் சொருக்கிக் கொள்ளலாம். எதுவுமே அழகுதான்!” எனக்குச் சற்று எரிச்சலாய் வந்தது. இதென்ன பதில்? ஆஹா ஒஹோ என்று என்னோடு சேர்ந்து மகிழ்ந்தால் என்ன ? ஆனால், நிதானத்தில் அவள் பதிலின் பாஷையைச் சிந்தித்துப் பார்க்கையில், நான் எதிர்பார்த்த பதில் மட்டு மல்ல, இல்லை. அந்தப் பதிலேயில்லை, வேறு என்னென் னவோ பதில்கள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு