பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 சிந்தாநதி நீ மண்ணைக் கவ்வினால், அதுவே பதில் இல்லையா? அம்மா வாய்விட்டுச் சிரிப்பது அபூர்வம். ஆனால் அவள் புன்னகை மிக்க சக்தி வாய்ந்தது. இளமை, முதுமை, வயது, காலம் தாண்டிய ஒரு தன்மை அதில் இருந்தது. Mystery. வியப்பு, அச்சம் ஒருங்கே பயக்கும் ஒரு வசீகரம். என் பிள்ளைப் பிராயத்தினிலே, கிராமத்தில், எங்கள் வீட்டுக்கெதிர் வீட்டில் குப்புசாமி முதலியார் என்று ஒருவர் நெல் குதிர். முழங்காலுக்கு மேல் கட்டை வேட்டி, மேல் முண்டோடு சரி. வாயைத் திறந்தால் அது பாட்டுக்கு அறப்பளிசுவரர் சதகம், பட்டினத்தார், தாயுமானவர், 'கச்சியே கம்பனே,' தேவாரம், திருவாசகம்- நீர்வீழ்ச்சியாகக் கொட்டும். அ.கூடிரங்கள் தனித் தனி முத்தென இலக்கணத் தமிழ் பேசுவார். நடைமேடையில் சாய்ந்தபடி, பாடாத நேரம், பேசாத நேரத்துக்கு ஒற்றை விரலால் காற்றில் எழுதிக் கொண்டிருப்பார். அது என்னவோ? சில சமயங்களில், அண்ணாவின் பாடங்களினின்று அபூர்வமாகக் கிடைத்த ஒழிவு நேரங்களில், ஊர் தாண்டி, வயல் நடுவே பிள்ளையார் கோவிலுக்கு அவருடன் போவேன். போவோமே ஒழிய, பிள்ளையாரை வணங்க மாட்டார். சேவிக்க மாட்டார். சன்னிதானத்துக்கெதிரே, மார்மேல் கை கட்டியபடி, தரையில் வட்டம் போட்டாற் போல் சுற்றி நடந்து கொண்டேயிருப்பார். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம்கூட நேரமாச்சு என்று