பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மோனம்-1 நவராத்ரி. மெளனம். இந்தப் பயிற்சி கடந்த நாலைந்து வருடங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே நாலைந்து வருடங் களாக, வாரம் திங்கள் மெளனம். இதுவே ஒரு தனிக் கதை. ஒரு தடவை, என் தங்கை மகள், வீட்டுக்கு வந்திருந்த சமயம், என் மனைவியும் நானும் உரத்த சண்டை. அவள் சற்று எரிச்சலுடன் என் பக்கம் திரும்பி, 'ஏன் மாமா, நீங்கள்தான் வாயை அடைச்சிண்டு இருக்கக்கூடாதா? என்னிக்கோ ஒரு நாளைக்கு வரேன்"- என்றாள். யார் கட்சி பேசினாளே? அவள் வார்த்தை முகூர்த்தம் அதையே உபதேசமாகக் கொண்டுவிட்டேன். : ஆனால், மோனத்தால் மனதைக் கட்டுப்படுத்த என் முயற்சி இதுவரை வீண். நான் புண்ணியம் தேடவில்லை. ஆனால் என் சுபாவத்தில் நான் மனப்போராட்டம் மிக்கவன். ஆனால், எவனுடைய மனப்போராட்டமும் எத் துணை லோகாதயமாக இருப்பினும், அதன் ஆதாரத்தில்