பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 & சிந்தாநதி No. மோனத்தின் சவாலை ஏற்றே ஆக வேண்டும். நான் உபாசிக்கும் எழுத்துக்கும் மோனத்துக்கும். ஏதோ இணைப்பு இருக்கிறது. எழுத்துக்கு அடுத்த பதவி அது தான். தவநிலை கேட்கவில்லை. மோனத்தையேனும் அடைய முடியாதா? அப்படி அடைய முடியா நிலையா அது? - - ஒன்றும் தெரியவில்லை. ஒரு ஏக்கம் தவிர, மோனத் தில் வார முழுக்கில், மூளைக்குள் கொப்புளிக்கும் என் திணறல் மூச்சுக் குமிழிகள் தவிர. அந்தி யிருளில் ஒவ்வொன்றையும், கொத்துக்கொத்தா யும், தன்னைத்தானே கொடுத்துக் கொள்ளும். மின்களின் வெள்ளிச் சுடரில் அகிலத்தின் லாயங்காலே அதன் பெருமூச்சில் -இதோ! இதோ!- விளிம்பில் ஏதோ நிற்பது போலும் ஒரு விதமான விறுவிறுப்பு தந்திசுண்டப் போகிறது. 'இதுதான் மோனத்தின் பாஷையா? அல்ல, அதன் ஆரம்பமா? முகம் காட்டவில்லை. அங்கம் காட்டவில்லை. முதுகு காட்டவில்லை. உருவே தெரியவில்லை. "காத்திருக்கிறேன்!” குரல் கேட்கவில்லை. பேச்சு மட்டும் வெளிச்சம் தெரிகிறது.