பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 269 வாசலில் வந்து உட்கார்ந்துகொண்டு விட்டதால் நான் வந்துவிட மாட்டேன். எலெக்ட்ரிக் ட்ரெயின் கடைசி வண்டி 11,45P.M." யாரிடமும் குறிப்பாயில்லாமல், காற்றுக்கு உரக்க Standing instructions. பட்டறைச் சுத்தியால் தட்டித் தட்டை ஆக்கி ஆகிறது. ஆனால், என்ன கர்ண கொடுரம்! @@oth Word magic graśr. Word-black magic. ★ ★ 女 நான் புத்தக அலமாரியைக் குடைந்து கொண் டிருக்கையில், வாசல் அறைக்குக் கம்மென்று மணம் எட்டுகிறது. என்னத்தை நெய்யில் வறுத்தாகிறது? ப்ரேமா புன்னகை புரிகிறாள். "ஒண்ணுமில்லே. சேமியா, பாயஸம் பண்ணலாம்னு இருக்கேன்.” 'ஏன், இன்னிக்கு ஏதேனும் விசேஷமா ?” உண்மையிலேயே எனக்குத் திகைப்பு. "நீங்கள் பெரியவா வந்திருக்கும் விசேஷம்தான்!” சின்ன அதிர்ச்சியில், சோபாவில் சாய்கிறேன். "ஆமாம், எனக்கு இன்று-அக்டோபர் முப்பது- என் பிறந்த நாள் என்று உனக்கு எப்படித் தெரியும் ?” "அப்படியா?" அவள் கண்கள் அலாதி சந்தோஷத்தில் விரிகின்றன. "நில்லுங்கோ நமஸ்காரம் பண்ணுகிறேன்." ஆசீர்வதிக்கக்கூட எழவில்லை. நாரின் தழுதழுப்பு. பூச்செண்டு அடி அகஸ்மாத்துள் ஒளிந்து கொண்டிருக் கும் தருணத்தின் புன்னகை.