பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் & 271 என் உடன் பிறந்தநாள், ஸ்டான்லியில், கொஞ்ச காலம் கிடந்தாள். நோயாளிகள் வருகிறார்கள், இருக்கிறார்கள், போகிறார்கள். ஒரு சமயம், பக்கத்துப் படுக்கையில் ஒரு முஸ்லிம் மாது சேர்ந்தாள். வெளிப் பார்வைக்கு அவள் நோய் தெரியவில்லை. நீண்ட தண்டில் ஆடும் மலர் போன்று மெலிந்த உடல். தும்பை நரைக் கூந்தலின் ஃப்ரேம் ஆன பனிவெள்ளையில் முகம். வயதாகிவிட்ட ஸ்நோ ஒய்ட்'. நடக்கவில்லை. படுக்கையிலேயே இருந்தாள். சில சமயங்கள் உட்கார்ந்து, சில சமயங்கள் சாய்ந்தபடி, ஆனால், கீழே இறங்கவில்லை. மாலை வேளையில் வெளியாரைப் பார்க்க விடும் நேரத்தில் அவள் படுக்கையை ஒரு கூட்டமே சூழ்ந்தது. ஆண்கள், பெண்டிர், குழந்தைகள். அந்தச் சமயங்களில் அவள் முகம் தனி ஒளி அடைந்தது. அவர்களுடன் பேசிச் சிரித்துக்கொண்டு ஜாலியாகவே இருந்தன. அவளுடைய தோற்றத்தில் பொதுவாகவே, நளினம் கலந்த ஒரு மேட்டிமை மிளிர்ந்தது. ஒரு குடும்பமும் அதன் சீமாட்டியும். ஒரு நாள் காலை, அவள் பல் விளக்க எழுந்திருக்க வில்லை. நர்ஸ் சொல்லி அனுப்பித்து, டாக்டர் வந்து பரிசோதித்து, வீட்டுக்குத் தகவல் அனுப்பித்து, அவளுடைய உறவினர் படுக்கையைச் சுற்றிக் கூடி அவளுக்கு வாயடைத்து விட்டது. அவளுடைய பிள்ளை மூத்தவரா, மூணாமவரா, தெரியவில்லை- கட்டிலில் உட்கார்ந்துகொண்டு, அவர் கையைத் தன் இரு கைகளிடையே பொத்திக்கொண்டு, சுற்றம் புடைசூழ