பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 : சிந்தாநதி "ஒரு குடும்பமும் அதன் சீமாட்டியும்.” மோனத்தின் வண்ணத்தில் தீட்டிய ஓவியம். வார்டு பூராவே மெளனம் இறங்கிவிட்டது. பிள்ளைமேல் வைத்த கண் வைத்தபடி, புன்னகை உறைந்தபடி, அன்புடன், Gentle ஆக, இருந்தாற் போலி ருந்து, அவர் அவள்மேல் குனிந்து கண் இமைகளை மூடினார். தலைகூட ஒரு பக்கமாகச் சாயவில்லை. மூச்சின் கேவல்கூட இல்லை. புறா எப்போது பறந்தது, தெரியவில்லை. பூஜையில், விளக்கிலிருந்து புஷ்பம் உதிர்ந்தாற்போல. பின்னால் தெரிய வந்தது. தனிப்பட்ட முறையில் அவளுக்கு நோய் ஏதுமில்லை. வயதாகி, முடிவின் நெருங் கலை உணர்ந்த பின், வீட்டில், பட்டணத்துச் சந்தடியில், தக்க வசதியின்மையால், அமைதியுடன் உயிர் நீக்கவே ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறாள். எழுபது, நூற்று ஐந்து, எழுநூறு, மஹா போதி மரம், கி.பி., கி.மு., யுகம், வயது என்று மணலை ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருக்க, எத்தனை நாள் வாழ்ந்தாலும், எத்தனை ஆயுசைக் கடன் வாங்கினாலும் போதாது. “மணலை எண்ணுவதற்குப் பதிலாக, குழந்தாய், உன் வீட்டைக் கட்டி விளையாடு. கோட்டை, மதில், அகழி, ஸ்தூபிகள். காற்றின் பொறாமை, உன்னுடையே பிறந்த உன் நாசத்தன்மை உன் மணல் வீட்டைக் கலைத்து அழிக்கையில்