பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 273 உன் முதல் துயரத்தை அறி. உன் மணல் நீ கண்ட மகிழ்ச்சியே உன் மேல் திரும்பிவிடும் துரோகத்தை உணர். உன் சத்தியத்தின் பட்டுக் கயிற்றை முறுக்கேற்றவே துயரங்களும், துரோகங்களும் இருக்கின்றன." பயமாயிருக்கே! இது ஆசீர்வாதமா, எச்சரிக்கையா, கொக்கரிப்பா, தெரியவில்லையே! “தெரியவில்லையா? பயப்படாதே. பயப்படுவதால் என்ன பயன் ? மணல் வீடுகள் அநித்தியமாயிருக்கலாம். ஆனால் அவைகள் இருந்தவரை, அவைகளில் நீ கண்ட அழகின் நினைப்பை நான்கூட அழிக்க முடியாது. குழந்தாய், என்ன முழிக்கிறே? இன்னும் நான் யார் தெரியவில்லையா? நீ விட்டுப் போகும் அடிச்சுவடுகளைத் தாங்கும் انتش மணல்.” சிந்தா நதியில் ஒரு சாரலின் பெருமூச்சு. 3. o శ్మి ఈ్యతి ● 속

சி ந - 18