பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 FHD0 சிற்றப்பாவுக்குக் கலியானமான புதுசு. சேப்பாக்கத் தில் வாலாஜா ரோடுக் கெதிரே ஒரு சந்தில்- சந்து மில்லை தெருவுமில்லை- குடியிருந்தோம். தேனிலவுதான் கட்டுப்படி ஆகாது. புதுத் தம்பதி களைக் கொஞ்ச காலமேனும் தனிக் குடித்தனத்தில் விட்டு வைக்கலாகாதா? அதுகூடக் கட்டுப்படி ஆக வில்லை. என்னையும் என் தம்பியையும் சிற்றப்பா தலையில் கட்டியாச்சு. சிற்றப்பாவுக்குத் தீராக் கடமைப்பட்டவனாவேன். தன் முழு நேர வேலை தவிர, சிற்றப்பா இரண்டு இடங்களில் பார்ட்-டைம் பார்த்து வந்தார். உழைப்புக் குச் சிற்றப்பா ராக்ஷஸன். அம்மாடி! அவர் மாதிரி எங்களால் முடியவே முடியாது. நடுத்தரக் குடும்பத்தின் கடின திசை ஓயாத திசை. காலி நெருப்புப் பெட்டியை நிமித்தி வைத்தாற்போல், எங்கள் வீடு, கீழே சின்னக் கூடம். ஒட்டினாற்போல் அதைவிடச் சின்னச் சமையலறை, இந்த விஸ்தாரத்துக்கு மொட்டை மாடி (படிக்கட்டோடு) இருந்ததோ, மணத்தோம். அங்கே பாதி இடத்துக்குச் சிறப்பா பந்தல் போட்டுக்கொண்டார்.