பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா.ச.ராமாமிருதம் : 27 அவனை 17-சி, 9, ரூட்களில் பார்த்ததாக என் பிள்ளை சொன்னான். அவன் விலாசம், வடபழனி தாண்டி- தெரியும். ஆனால் போகமாட்டேன். அன்று ராமன், அக்னி சாகூவியாக, குஹனை, சுக்ரீவனைச் சோதரனாக வரித்தான். இன்று என் ஐந்தாம் பிள்ளையாக வரிக்க, சாகூதி அக்னி என் எழுத்தா? ஜன்மாவின் தொட்ட பிசுக்கு- தொட்டாப் பிசுக்கு, மறு கண் ஆபரேஷனுக்குக் காத்திருக்கிறது. அப்போது வருவாயா? அல்லது இன்னொரு வெங்கட்ராமனா? சிந்தா நதியில் குமிழிகள் தோன்றுகின்றன. சேர்கின்றன, பிரிகின்றன, மூழ்குகின்றன, மறைகின்றன.